`முக்கிய அறிவிப்பு' - `யாரும் கடனை கேட்டு வராதீங்க..' - அதிரவைக்கும் அறிவிப்பு பலகை

x

முக்கிய அறிவிப்பு' - `யாரும் கடனை கேட்டு வராதீங்க..' - அதிரவைக்கும் அறிவிப்பு பலகை

சிவகாசி அருகே, கொடுத்த கடனை வசூலிக்க ஜூலை 5-ம் தேதி வரை யாரும் வரக் கூடாது என கிராம நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி பகுதியில் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பட்டாசு தொழில் நசிந்துள்ளது. இதனால், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், இப்பகுதியில் தற்கொலை சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிவகாசி அருகே, மீனம்பட்டி கிராமத்திற்கு, கடன் கொடுத்தவர்கள் வரும் ஜூலை மாதம் 5-ம் தேதி வரை கடன் வசூலிக்க வரக்கூடாது என கிராம நுழைவாயிலில் அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். ஒட்டுமொத்த கிராம மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்