"மிகப்பெரிய அச்சுறுத்தல்" - ராகுல் காந்தி பரபரப்பு பதிவு
இன்று நடைபெறவிருந்த நீட் பிஜி தேர்வை சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்ததை அடுத்து, ராகுல் காந்தி மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சித்துள்ளார். நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, முறைகேடு குற்றச்சாட்டை விமர்சித்த ராகுல் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பா.ஜ.க. அரசு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று சாடியுள்ளார். நீட் பிஜி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது பிரதமர் மோடியின் ஆட்சியில் பாழடைந்த கல்வி முறைக்கு மற்றொரு துரதிர்ஷ்டவசமான எடுத்துக்காட்டு என்று தன் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story