பரபரப்பை பற்றவைத்த போஸ்டர் - அண்ணாமலைக்கு எதிராக வலுக்கும் கண்டனம்

x

சிவகங்கை மாவட்டம் முழுவதும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விட்டு அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்களல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக அணையப் போகிற விளக்கு, 4ம் தேதிக்குப் பின் அதிமுக அணைந்து விடும் என அண்ணாமலை தெரிவித்து இருந்தார்... இதனால் அதிமுகவினர் அண்ணாமலைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து மாவட்டம் முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதில் ஜூன் 4க்கு பிறகு அணையப்போகும் விளக்கு யார்?... எரியப் போகும் விளக்கு யார்? என தெரிய வரும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்