`பரந்தூர் விமான நிலைய விவகாரம்' - சீமான் அதிரடி பதிவு
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்பு குழுவினரை, போலீசார் கைது செய்தது கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், தங்கள் கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தாததை எதிர்த்தும், தங்கள் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அவர்கள் போராட முயன்றனர். அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான அவர்களது போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவளிக்கும் என சீமான் தெரிவித்தார். மேலும், கைதான 20 பேரையும் விடுவிக்க அவர் வலியுறுத்தினார்.
Next Story