"23 லட்சம் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி" - நீட் குளறுபடியால் வெடிக்கும் சர்ச்சை

x

கடந்த கால பாஜக ஆட்சியை விட மோசமாக நடைபெற்று வருவதை தான் தேசிய தேர்வு முகமை மற்றும் யு.பி,எஸ்.சி குளறுபடிகள் படம் பிடித்து காட்டுவதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்...

உச்சநீதிமன்ற ஆணையின்படி நாடு முழுவதும் நடந்த நீட் முடிவுகள் நேற்று வெளியாகின. ஜூன் மாதம் 4 ஆம் தேதி நீட் முடிவு வெளியான அறிவிப்பில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 920 பேர் தமிழ்நாட்டில் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று வெளியான மதிப்பெண் பட்டியலில் 744 பேர் கூடுதலாக எழுதியிருப்பதாக இருந்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக செல்வப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்... 23 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதிய நிலையில் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக செல்வப்பெருந்தகை கவலை தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்