`பதவியேற்க வந்த மோடி' - ராகுல் செய்த திடீர் சம்பவம் - பரபரப்பு காட்சி

x

18 ஆவது நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் தொடங்கியதும், பிரதமர் மோடி எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டார். அவர் எம்.பி.யாக பதவிஏற்க நடந்துச் சென்ற போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எல்லாம் எழுந்து அரசியல்சாசன புத்தகத்தை ஏந்திபிடித்திருந்தனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சமாஜ்வாடி எம்.பி. அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் புத்தகத்தை உயர்த்தி பிடித்திருந்தனர். அரசியல்சாசனத்தை காக்க வேண்டும் என்றவர்கள் அரசியல் சாசனப்படி நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி எம்.பி.யாக பதவி ஏற்க செல்கையி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பை பதிவு செய்தது அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்