லாக்ஹீடு மார்ட்டினின் உறுதிப்பாட்டிற்கு பிரதமர் பாராட்டு
ராணுவத் தளவாட தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முக்கிய நிறுவனமான லாக்ஹீடு மார்ட்டினின், 'இந்தியாவில் தயாரிப்போம், உலகிற்காக தயாரிப்போம்' என்ற உறுதிப்பாட்டிற்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். லாக்ஹீடு மார்ட்டின் நிறுவனத்தின்
தலைமைச் செயல் அதிகாரி ஜிம் டெய்க்லட், பிரதமர் மோடியை வியாழனன்று சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் இட்ட பதிவில், இந்தியா, அமெரிக்கா விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் சார்ந்த ஒத்துழைப்பில் லாக்ஹீடு மார்ட்டின் முக்கிய பங்குதாரராக உள்ளதாக கூறியுள்ளது.
Next Story