இடஒதுக்கீடு விவகாரம் - கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - காவல்துறை அதிரடி

x

கர்நாடகாவில் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலதிபர்களுக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த மசோதா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கொடுத்த அழுத்தமே காரணம் என்று கன்னட அமைப்பினர் குற்றம் சாட்டினர். பெங்களூருவில் ஐ.டி துறைக்கு எதிராக, கர்நாடகா ரக்ஷனா வேதிகே சார்பில் போராட்டம் நடைபெற்றது. அரசு கொண்டுவந்த மசோதாவை விரைவில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்