ஆந்திராவை புரட்டிப்போட்ட வெள்ளம் - ஜேசிபியோடு களத்தில் இறங்கிய சந்திரபாபு நாயுடு

x

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜே.சி.பி. வாகனத்தில் சென்று ஆய்வு செய்தார். வெள்ளத்தில் நடந்து சென்றவர் பொதுமக்களிடம் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கிறதா? என கேட்டறிந்தார். சிலர் எல்லா உதவிப் பொருட்களும் கிடைத்ததாக குறிப்பிட்ட வேளையில், குடிசைகளில் இருந்தவர்கள் தங்களுக்கு எந்த உதவியும் கிடைப்பது இல்லை என குற்றம் சாட்டினர். அவர்களுக்கு உதவுவதாக குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, வீடு இடிந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்