"அந்த மதம் தனக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்..."மேடையில் PM மோடி அவேசம்
மக்களவைத் தேர்தலையொட்டி மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தங்கள் கட்சியைப் பிள்ளைகளிடம் ஒப்படைக்க இந்தியா கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுவதாக தெரிவித்தார்... இந்தியாவில் ராம ராஜ்ஜியமா அல்லது வாக்கு ஜிகாத்தா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக ஜிகாத் அறிவிப்பதாக குற்றம் சாட்டிய பிரதமர், இங்கு தனக்கு எதிராக வாக்கு ஜிகாத் செய்ய வேண்டுமென காங்கிரஸ் கட்சியும் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்... ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் தனக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக குறிப்பிட்ட அவர்,
ஒவ்வொரு கட்டத் தேர்தலிலும் பாகிஸ்தான் மீதான காங்கிரஸ் கட்சியின் காதல் புதிய உச்சத்தை எட்டி இருப்பதாக சாடினார்...