"கோவையில் முப்பெரும் விழா" - துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"கோவையில் முப்பெரும் விழா" - துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கோவையில் முப்பெரும் விழா, ஜூன் 14ம் தேதிக்குப் பதிலாக, 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு விழா என, முப்பெரும் விழா, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14ம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 15ம் தேதி மாலை 4 மணியளவில், கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், கூட்டணிக்கட்சித் தலைவர்கள், வெற்றி பெற்ற 40 எம்.பி.க்களும் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.