வெறிநாய்க்கடி விவகாரம் - சட்டப்பேரவையில் அமைச்சர் - முக்கிய அறிவிப்பு
சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை அமைச்சர் அனிதா ராதாகருஷ்ணன் வெளியிட்டார். அதில், விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் கொடிய நோயான வெறி நாய்க்கடி நோயினை தடுப்பதற்காகவும், மனிதர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, ஒருங்கிணைந்த சுகாதார திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஐந்து லட்சம் செல்ல பிராணிகளுக்குவெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார். மேலும் கால்நடை நிலையங்களில் நவீன நோய் அறியும் கருவிகளை கையாளுவதற்கென 400 கால் நடை மருத்துவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் எனவும் அமைச்சர் அனிதா ராதாகருஷ்ணன் அறிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில், ஆதரவற்ற 38 ஆயிரத்து 700 பெண் பயனாளிகளுக்கு தலா 40 நாட்டின கோழி குஞ்சுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.