`கோவை விமான நிலையம்' MP கொடுத்த முக்கிய Update
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 662 ஏக்கர்
நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில்
468 ஏக்கர் பட்டா நிலமாக உள்ள நிலையில், 97 சதவீத
நிலம் கையக்கப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மீதம்
உள்ள 16 ஏக்கரில், எட்டு ஏக்கர் நீதிமன்ற வழக்குகளில்
உள்ளதாகவும், மீதம் உள்ளவற்றை இந்த மாத இறுதிக்குள்
கையக்கப்படுத்திவிடுவோம் என்றார். கோவை விமான
நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற இனி
எவ்வித முட்டுக்கட்டைகளும் இருக்காது என்றார். விமான
நிலைய விரிவாக்கத்தில் தொழில்துறை அமைச்சர் ராஜாவின் பங்களிப்பும் மிக முக்கியமானது என்றார். கோவை மெட்ரோ பணிகளுக்கான அனைத்து தகவல்களையும் திரட்டி மத்திய அரசிடம் கொடுத்து விட்டதாகவும், இனி அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்து அவர்களது பங்களிப்பை பற்றி தகவல் அளிக்க வேண்டும் என்றார்.
Next Story