"முதல்வர் உடையில் தெரிந்த மாற்றம்... காவலர்களுக்கும் கலர் மாற்றம்.." பரபரப்பை கிளப்பிய சீமான்

x

திமுகவுக்கும் பாஜகவுக்கும் கொள்கை மாறுபாடு இல்லை என்றும், வெளியில் எதிர்ப்பது போல எதிர்த்து விட்டு, மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில், மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய சீமான், தமிழக அரசு மின்சார வாரிய கேங்மேன் ஊழியர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்