பாமக MLA-க்கு நன்றி சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின் - காரணம்?
நீட் தேர்வு விலக்கு தீர்மானத்திற்கு ஆதரவாக பா.ம.க உறுப்பினர் பேசியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார். தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை ஆதரித்து பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசினார். பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியாக இருந்தபோதிலும், அவரும் வரவேற்று பேசியதற்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Next Story