சென்னை மக்கள் கவனத்திற்கு - பேரவையில் ஒலித்த முக்கிய அறிவிப்பு
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் திருத்த சட்ட முன்வடிவை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் தனியார் வளாகம் மற்றும் தெருவில் இருந்து 30 மீட்டர் தூரத்திற்குள் கழிவுநீர் பாதை இருந்தால், அதன் உரிமையாளர் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இணைப்பு வழங்குவதில் கழிவுநீர் வாரியத்திற்கு ஏற்படும் செலவுகளை வளாகம் மற்றும் தனியார் தெருவின் உரிமையாளரே ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறினால் 6 மாத சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Next Story