PM ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள்...அடுத்த 3 பள்ளிகள் மீது பாய்ந்த வழக்கு
கோவையில் கடந்த 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ என்ற வாகன பேரணி நடந்தது. இதில், 3 தனியார் பள்ளிகளை சேர்ந்த 22 மாணவ-மாணவிகள் இந்து தெய்வங்களைப் போல உடையணிந்தும், கட்சி சின்னங்கள் அடங்கிய காவி நிறத் துணிகளுடனும் கலந்து கொண்டனர். இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அந்த 3 பள்ளிகள் மீதும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சின்மயா குழுமத்தின் கீழ் இயங்கும் அந்த மூன்று தனியார் பள்ளிகள் மீதும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சாய்பாபா கோவில் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மேலும் மூன்று தனியார் பள்ளிகள் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story