அசாம் மாநிலத்தை சூறையாடும் இயற்கை சீற்றம் - நிற்காமல் உயரும் பலி எண்ணிக்கை
அசாம் மாநிலத்தில் தொடர் மழையால், 24 மாவட்டங்களில் உள்ள 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சார், துப்ரி, கோல்பாரா, லகிம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தில் சிக்கி மேலும் 7 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 90-ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சுமார் 33 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
Next Story