`அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரம்' "அவர் ஒன்றும் தீவிரவாதி அல்ல" - நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பு விவாதம்

x

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை வழக்கில் கடந்த 12 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் சிபிஐயும் விசாரித்து வருகிறது. சிபிஐயும் கெஜ்ரிவாலை கைது செய்தது. சிபிஐ தன்னை கைது செய்ததற்கு எதிராகவும், இடைக்கால ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. கெஜ்ரிவாலை தொடர்ந்து சிறையில் அடைக்கவே சிபிஐ திட்டமிட்டு அவரை கைது செய்துள்ளது, அவர் ஒன்றும் தீவிரவாதி அல்ல, கைது செய்தது சட்டவிரோதம் என கெஜ்ரிவால் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார். ஆனால் சட்டவிரோதமாக யாரையும் கைது செய்யவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.


Next Story

மேலும் செய்திகள்