தெலங்கானா அரசியலில் பரபரப்பை கிளப்பியஅமித் ஷா,தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு
டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக உள்துறை அமைச்சர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களாக அந்தமான், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வருகின்றனர். பஞ்சாப் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், அண்மையில் அமித்ஷாவை சந்தித்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜனின் சந்திப்பு, தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story