ஆதிதிராவிடர் பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த எம்.எல்.ஏ

x

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அலிவலத்தில் புதிய பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்ட பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் சென்றிருந்தார். அப்போது, ஆதிதிராவிடர் நலப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் வருவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தலைமை ஆசிரியர் வீரமணி பணியில் இல்லை. இதுகுறித்து உதவி ஆசிரியர் ராஜேஸ்வரிடம் கேட்டபோது தலைமை ஆசிரியர் விடுப்பில் சென்றிருப்பதாக தெரிவித்தார். உடனடியாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு, பொதுமக்கள் புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்