மறைந்த அரசியல் தலைவர் பெயரை சொல்லிய மேயர்.. மாநகராட்சி கூட்டத்தில் பெரும்பரபரப்பு
தஞ்சை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 32 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி கவுன்சிலர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் அமமுக கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கேட்டு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மேயர் இராமநாதனிடம் மனு அளித்தனர். தொடர்ந்து தஞ்சை மாநகராட்சியில் 32 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டிய நிலையில், ஊழலுக்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என மேயர் பதிலளித்தார். இதனால், மேயரை கண்டித்து கவுன்சிலர்கள் கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர்.
Next Story