"கருத்து கணிப்பு பெயரில் மக்களை ஏமாற்றுவதா?" -டிடிவி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு

x

தேர்தல் கருத்து கணிப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தஞ்சாவூர், திலகர் திடலில் திமுக அரசைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், தேர்தல் தேதியும் அறிவிக்கவில்லை, கட்சிகளின் கூட்டணியும் முடிவாகவில்லை, ஆனால் கருத்து கணிப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்