கோயில் நில மோசடி..பாஜக MLA க்கு சிக்கல்..நீதிமன்றம் அதிரடி..
கோயில் நில விற்பனை மோசடி வழக்கில், புதுவை பாஜக எம்எல்ஏ ஜான் குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்ளது. புதுச்சேரி, காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, போலி பத்திரம் தயாரித்து விற்கப்பட்டதாக புகாரளிக்கப்பட்டது. இதில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏ ஜான்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கிற்கான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமனவும், அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்றால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Next Story