தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து, அதிமுக சார்பில் ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர், ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் இரண்டாவது கட்டமாக போட்டி தேர்வு எழுத வேண்டுமென, அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டிருந்தாலும், அது அமல்படுத்தப்படவில்லை என்றார். முன்னதாக மாபொசிக்கு மரியாதை செலுத்திய பின்னர் பேசிய ஜெயக்குமார், இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட13 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
Next Story