"டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை.. அதனால்தான் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள்" - அமைச்சர் துரைமுருகன்

x

உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை என்றவர், அரசாங்கம் விற்கும் மதுவில் அவர்களுக்கு தேவையான கிக் இல்லாததால், கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர் என்றார். அரசாங்கம் விற்கும் சரக்கு அவர்களுக்கு Soft Drink போல மாறிவிடுகிறது, எனவே விட்டில் பூச்சி விளக்கில் போய் விழுவதை போன்று விழுந்து செத்து விடுகின்றனர் எனவும் துரைமுருகன் விளக்கம் அளித்தார். அதற்காக தெருவுக்கு தெரு காவல் நிலையம் திறக்க முடியாது என்றவர், மனிதனாய் பார்த்துதான் திருந்த வேண்டும் என்றார். கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என்று கூட சட்டம் இயற்றலாம், ஆனால் எல்லாத்துக்கும் ஒரு நியாயம் இருக்க வேண்டும் என குறிப்பிட்டவர், நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்