தமிழகத்தை உலுக்கிய அரசியல் கொலை.. `X'ல் தவெக தலைவர் விஜய் பதிவு

x

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், ஆம்ஸ்ட்ராங்கை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும், இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்