தமிழகத்தில் இன்று முதல் அமல்.. தாறுமாறாக உயர்கிறது கட்டணம்
தமிழகத்தில் 7 சுங்கச்சாவடிகளில் 20 ரூபாய் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம்,
திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலும்,
மாதாந்திர பாஸ் கட்டணம் 100 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்திற்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது.
மாதாந்திர பாஸ் கட்டணம் 45 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையிலும், உள்ளூர் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் 10 ரூபாய் வரையிலும் உயர்வு
ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்திற்கு 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது.
மாதாந்திர பாஸ் கட்டணம் 60 ரூபாய் முதல் 190 ரூபாய் வரையில் உயர்த்தப்படுகிறது.