5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை மட்டுமே பதவிக்காலம் - தயார்நிலையில் சட்டமுன்வடிவு?

x

1994-ஆம் ஆண்டு ஊராட்சிகள் சட்ட உட்பிரிவுகளின்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருடைய பதவிக்காலம் 2 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக 2 முறை நியமிக்கப்படலாம் என்றும், மொத்தம் 6 ஆண்டுகள் பதவிக்காலம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பல மாநிலங்களில் மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலம், 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை, எது முந்தையதோ அதுவரை பதவி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதையே தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த ஊராட்சிகள் சட்டத்தை திருத்தம் செய்ய முடிவு செய்து, சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பதவி ஏற்ற நாளில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை, எது முந்தையதோ அதுவரை பதவியில் இருக்க வேண்டும் என்றும், அவர் மறுபணியமர்த்தத்திற்கு தகுதிவுடையவர் இல்லை என்றும் திருத்தம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்