கடும் வேதனையில் தமிழக டிஜிபிக்கு நீதிபதி போட்ட உத்தரவு

x

தமிழகத்தில் தேர்தல்களில் பணப்பட்டுவாடா தொடர்பாக பதிவான வழக்குகள், எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர், உள்ளாட்சித் தேர்தலின்போது தனது மனைவி மீது போடப்பட்ட பணப்பட்டுவாடா வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாகவும், இதுபோன்று வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.இந்த வழக்குகளை போலீசார்தான் முறையாக நடத்த வேண்டும் என்றும், ஆனால், இதுவரை யாருக்கும் தண்டனை பெற்றுக் கொடுத்த‌தாக தகவல் இல்லை என வேதனை தெரிவித்தார். இந்த வழக்கில் டிஜிபியை எதிர்மனுதார‌ராக சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில், பணப்பட்டுவாடா நடந்த‌தாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? என கேள்வி எழுப்பினார். இதில் எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர்? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்