பந்தக்கால் நாட்டிய கையோடு தவெக மாநாட்டிற்கு வந்த புது சிக்கல் | TVK Vijay | Thanthitv
தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு மூன்று லட்சம் தொண்டர்களுக்கு குறையாமல் வருவார்கள் என அதிர்ச்சித் தகவல் வெளியான நிலையில், அவ்வாறு தொண்டர்கள் வந்தால், வாகனங்களை நிறுத்துவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாநாடு நடைபெற உள்ள இடத்தை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் சிவாச், காவல்துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். வாகனங்களை நிறுத்த குறைந்தபட்சம் 100 ஏக்கராவது தேவைப்படும் என காவல்துறை தரப்பில் கணக்கிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், த.வெ.க பார்த்துள்ள இடத்தில், மொத்தம் 45 ஏக்கர் மட்டுமே வாகனங்கள் நிறுத்த தகுதியான இடம் என காவல்துறை ஆய்வு செய்து முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கூடுதல் இடங்களை வாடகைக்கு பெற த.வெ.க.வுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. வாகனங்கள் நிறுத்துமிடத்தால் த.வெ.க.வுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.