சபரிமலை பக்தர்களுக்காக பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்.. உறுதி அளித்த கேரள அரசு
- சபரிமலையில் தமிழக பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என கேரள அரசு கூறியுள்ளது.
- சபரிமலையில் கட்டுகடக்காத கூட்டத்தால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
- பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
- இதனிடையே, தமிழக பக்தர்களுக்கு அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேரள அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.
- இந்நிலையில், இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கேரள தலைமைச் செயலாளர் வேணுவுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார்.
- அப்போது தமிழக பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஒருங்கிணைக்கப்படும் என்று கேரள தலைமைச் செயலாளர் உறுதி அளித்துள்ளார்.
Next Story