தீயாய் பரவிய சுரேஷ் கோபியின் வீடியோ.. அமித்ஷா போட்ட ஷாக் உத்தரவு |
திருச்சூரில் சுரேஷ் கோபியை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், கேரள நடிகைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். அப்போது, ஆவேசமடைந்த அவர், ஒரு செய்தியாளரை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சுரேஷ் கோபிக்கான பாதுகாப்பை அதிகரிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, திருச்சூர் நகர போலீஸ் கமிஷனரிடம், சுரேஷ் கோபியும் புகார் அளித்த்துள்ளதாக கூறப்படுகிறது.
Next Story