"போதைக்கு எதிராக கடும் நடவடிக்கை" - அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

x

தமிழகத்தில் போதைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வாழும் கலை அமைப்பு சார்பில், போதை இல்லாத இந்தியா என்ற இலக்கை முன்வைத்து, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்