ஒரேயோரு தலைப்பாகையால் குறிப்பிட்ட வாக்கு வங்கியை தன் பக்கம் திருப்பிய வேலுமணி.. பரபரக்கும் கோவை களம்
கோவையில் உள்ள ராஜஸ்தானி சங்கம், அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்கத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். அவருக்கு, ராஜஸ்தானி சங்கத்தினர் தலைப்பாகை அணிவித்து வாழ்த்தினர். நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். கோவைக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்ததாகவும், அடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை இருக்காது என்றும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
Next Story