ஸ்பெயினிலிருந்து திரும்பியவுடன் முதல்வர் சொல்லப்போகும் முக்கிய தகவல்
ஸ்பெயின் நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் தமிழகம் புறப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பயணத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு புறப்பட்டுள்ளார். இன்று காலை 8 மணிக்கு சென்னை வந்தடையும் முதல்வர் ஸ்டாலினுக்கு, திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அப்போது ஸ்பெயினில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து, செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். இந்த சூழலில், தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஸ்பெயின் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு, அவர்களது ஒருங்கிணைப்பு பணிகளுக்காக நன்றி தெரிவித்துள்ளார். மேலும், பொக்கிஷமான நினைவுகளுக்காக ஸ்பெயின் மக்களுக்கும், அந்தநாட்டின் தமிழ் சமூகத்திற்கும், நன்றி தெரிவிப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.