அமைதியின் சிகரம் சோனியா காந்தியவே கொந்தளிக்க வைத்த பிரதமர் கொளுத்திய வெடி

x

பிரிவினைவாதம் மற்றும் வெறுப்பு அரசியலை இந்திய மக்கள் நிராகரித்துவிட்டதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ஹிந்து ஆங்கில நாளிதழுக்கு சோனியா காந்தி எழுதியுள்ள தலையங்க கட்டுரையில், எமர்ஜென்சிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றியை இதுவரை மோடியோ அவரது கட்சியோ கூட பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். பிரச்சாரத்தின்போது தன்னை தெய்வீக அம்சம் கொண்டவராக காட்டிக்கொண்ட ஒரு பிரதமருக்கு இது தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக தோல்வி என குறிப்பிட்டுள்ளார். அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட விவகாரம் பிரதமராலும், அவரது கட்சியினராலும் தோண்டி எடுக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டதாகவும், இவ்விஷயத்தில் சபாநாயகரின் நிலைப்பாடு, பாரபட்சம் கொண்டதாகவும், அரசியலாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார். நமது லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்திய நீட் ஊழல் குறித்து, கல்வி அமைச்சர் அளித்த உடனடி பதில், அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதுதான் என தெரிவித்துள்ள சோனியா காந்தி, கடந்த 10 ஆண்டுகளில் என்சிஇஆர்டி, யுஜிசி போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் தொழில்முறை ஆழமாக சேதமடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்