ஆரத்தி எடுத்து, திலகமிட்ட மூதாட்டிகள்... அன்பால் திக்குமுக்காடிய சேவியர் தாஸ்...

x

ஆரத்தி எடுத்து, திலகமிட்ட மூதாட்டிகள்... அன்பால் திக்குமுக்காடிய சேவியர் தாஸ்... அடுத்த நொடியே செய்த செயல்... பிரசாரத்தில் நெகிழ்ச்சி

#ElectionCommission #LokSabhaElections2024 #SivaGanga #XavierDas #AIADMK #ElectionWithThanthiTV

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்காக சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள் உற்சாகமாகக் காத்திருந்தனர். சேவியர் தாஸ் வந்ததும் அவருக்கு மாலைகள் அணிவித்து, ஆரத்தி எடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மூதாட்டிகள் சேவியர் தாசுக்குத் திலகமிட்டு வாழ்த்தினர். அவர்கள் காலில் விழுந்து சேவியர் தாஸ் ஆசி பெற்றார். தொடர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்