காங்கிரஸுக்கு எதிராக எழுந்த கோஷம்.. பரபரப்பாகிய பொதுக்குழு மேடை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், மத்திய அரசு நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தை வெளியேறக் கூறி, பாஜகவினர் கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் காரைக்குடி இரயில் நிலைய மேம்படுத்தப்படவுள்ளது. இதன் தொடக்க விழாவில் பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ஜி.எஸ்.டி தொகை குறித்து விமர்சித்து பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், அவரை வெளியேற சொல்லி கோசமிட்டனர். அதனால், காங்கிரஸ் தொண்டர்கள், பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story