சீதாராம் யெச்சூரியின் மறைவு - அடுத்த ஒரு வாரத்திற்கு..
சீதாராம் யெச்சூரியின் மறைவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தோழர் யெச்சூரிக்கு அளிக்கப்பட்ட சிறந்த சிகிச்சை மற்றும் பராமரிப்புக்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் எய்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குநருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சிபிஎம் அலுவலகத்தில் 14-ம் தேதி, சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு ய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கொடியின் மகத்தான புதல்வர் தோழர் சீதாராம் யெச்சூரிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது என்று, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஒருவார காலத்திற்கு கட்சி கொடியினை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு மரியாதை செலுத்துமாறும், மூன்று நாட்களுக்கு கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்யுமாறும் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று தமது அறிக்கையில் கூறியுள்ளார்.