ஈபிஎஸ் வழக்கில் ஷாக் தீர்ப்பு.. ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு
அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ் குமார் முன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் அதே பதவியை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தி வருகிறார் என்று ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
Next Story