செந்தில்பாலாஜி வழக்கில் பாயிண்டை பிடித்த உச்ச நீதிமன்றம்.. ஆடிப்போன அமலாக்கத்துறை

x

பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை தொடர்பு படுத்தும் ஆதாரத்தை தெளிவுப்படுத்த அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரும் செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்தது.

பணமோசடி புகாருக்கான ஆதாரமாக கூறப்படும் கோப்பு, கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் இல்லை என்பது செந்தில் பாலாஜியின் வாதமாக உள்ளதே?, இந்த கோப்பு எப்படி அமலாக்கத் துறைக்கு கிடைத்தது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் இந்த கோப்பு தங்களுக்கு கிடைத்தாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பதிலால் திருப்தியடையாத உச்சநீதிமன்றம் உரிய விளக்கத்துடன் வருமாறு தெரிவித்து விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தது.



Next Story

மேலும் செய்திகள்