முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு என்னாச்சு? மருத்துவர்கள் இன்று எடுக்கும் முக்கிய முடிவு

x

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு என்னாச்சு? மருத்துவர்கள் இன்று எடுக்கும் முக்கிய முடிவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 முறை எக்மோ பரிசோதனை செய்து, இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளதா என மருத்துவர்கள் குழு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா, வேறு இடத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்

இசிஜி, ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய ரத்த பரிசோதனைகள், 2 முறை எக்மோ பரிசோதனைகள் என இருதயவியல் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதயவியல் மூத்த மருத்துவர் கார்த்திக்கேயன் தலைமையிலான மருத்துவ குழு, செந்தில் பாலாஜியை கண்காணித்து வருகின்றனர்.

அடுத்த கட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் குழு செவ்வாய்க்கிழமை முடிவு செய்ய உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்