"கைதாகி ஜாமினில் வெளியே வந்தால் தியாகி பட்டமா?" - ஈபிஎஸ் பரபரப்பு கேள்வி | EPS | ADMK

x

சட்ட விரோத செயல்களில் கைதாகி ஜாமினில் வெளியே வருபவர்களுக்கு முதலமைச்சரே தியாகி பட்டம் வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை துறைமுகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 112 கிலோ போதைப்பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, போதைப்பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சம்பாதித்த பணத்தில் யார் யாருக்கு பங்கு இருக்கிறது என்பதை தெரிந்தும் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்துளார். சட்ட விரோத செயல்களில் கைதாகி ஜாமினில் வெளியே வருபவர்களுக்கு முதலமைச்சரே தியாகி பட்டம் வழங்குவதால், சமூக விரோத சக்திகள் தெம்புடன் வலம் வருவதில் ஆச்சரியம் இல்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்