ஒரே நாளில் 2 முறை நீதிமன்றத்திற்கு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி

x

அமலாக்க துறை வழக்கு விசாரணைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி, இரண்டு முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், உச்ச நீதிமன்ற ஜாமினில் விடுதலையான அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்க துறை வழக்கு விசாரணைக்காக கடந்த வாரம் ஆஜராகியிருந்தார். இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு மீண்டும் வெள்ளியன்று விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகியிருந்தார்.

அமலாக்க துறை சாட்சியான மணிவண்ணனும் ஆஜராகியிருந்தார். விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் இளங்கோவின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, சாட்சி விசாரணை மேற்கொள்ளப்படும்

எனக் கூறி, விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார். பிற்பகல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜரானார். தடயவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் மேற்கொண்ட குறுக்கு விசாரணை நிறைவடையாததால், வழக்கு விசாரணையை அக்டோபர் 29க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்