அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜி..! ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? வழக்கறிஞர் இன்பதுரை திடீர் கேள்வி
ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா என்பது தங்கள் வழக்கு அல்ல என்றும், செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி தொடர்கிறார் என்பது தான் எனவும், அ.தி.மு.க. வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வழக்கில் எழுத்துப் பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவில் செந்தில் பாலாஜி கையெழுத்திட முடியாத நிலையில், அரசாணை வெளியிட்டால் அந்த சட்டம் செல்லுமா என்றும் இன்பதுரை கேள்வி எழுப்பினார்.
Next Story