``முடிந்தால் கைது செய்...'' சவால் விட்ட சீமான் - ``ஓரிரு வாரத்திற்குள்..'' - போலீசார் அதிரடி

x

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பாடல் பாடிய விவகாரத்தில், சீமானுக்கு ஓரிரு வாரத்திற்குள் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

விக்கிரவாண்டி பிரசாரத்தில் கருணாநிதி குறித்து சீமான் பாடிய பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. புகார்கள் குவிந்த போது, செய்தியாளர்கள் சந்திப்பிலும் பாடலை பாடிய சீமான் முடிந்தால் கைது செய்யுங்கள் என சவால் விட்டார். பட்டாபிராம் காவல் நிலையத்தில் அவர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. தொடர்ச்சியாக வழக்கில் விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் காவல் உதவி ஆணையர் சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டார். இப்போது ஆவணங்களை திரட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகிவரும் போலீசார், சீமானுக்கு ஓரிரு வாரத்திற்குள் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்