சீமான் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை | Seeman

x

பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் நரேன் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நரேன் என்ற மாணவனை தற்கொலை செய்யும் அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய பள்ளி நிர்வாகத்தின் செயல் அதிர்ச்சியும் கோவத்தையும் ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். பள்ளி மீது நடவடிக்கை எடுக்க‌க்கோரி போராடிய மாணவரின் பெற்றோரை கைது செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், நீதி விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை மெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்