``உண்மை குற்றவாளிகள்..'' சீமான் ஆவேச அறிக்கை... | Seeman

x

மருத்துவர்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்ணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் இயங்குவதை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்