"இனியும் தாமதிக்காதீங்க முதல்வரே.." - கொதித்து போய் சீமான் அவசர கோரிக்கை

x

சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் முருகனின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்... முதலமைச்சர் இனியும் தாமதிக்காமல் அதிகரித்து வரும் காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சங்கரன்கோவில் முருகனின் படுகொலைக்குக் காரணமான காவலர்கள் மீது விரைவான நியாயமான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்... மேலும், முருகனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்